தமிழ்நாட்டின் துரோகிகள் தான் திமுகவும் பாஜகவும்:முன்னாள் அமைச்சர்
வடசென்னை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் வாக்கு கேட்க முடியாத அளவுக்கு நிலை உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மீது கடுமையான அதிருப்தி உள்ளது, செல்லும் இடமெல்லாம் விரட்டி அடிக்கும் நிலை உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை மாநில உரிமைகள் காக்கப்பட்டது, எடப்பாடி மாநில உரிமை விட்டுக் கொடுத்துவிட்டார் என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு,
மத்தியில் ஆட்சியில் உத்தரவு போடும் இடத்தில் இருந்தனர், கல்வியை அவர்கள் நினைத்து இருந்தால் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து இருக்கலாம். எங்கள் நிலைப்பாடு இன்றும் கச்சத் தீவை மீட்பது தான். பிரதமர் இந்தியா வந்த போது கச்சத்தீவு திரும்ப பெற ஒப்பந்தம் ஏன் போடப்படவில்லை. தமிழ்நாட்டின் துரோகிகள் திமுக மற்றும் பாஜக. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டது, தமிழகத்துக்கு எவ்வளவு நிதி பெற்று தந்தது. தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டார்கள், கவர்னர் தேவையில்லை என்று 17 ஆண்டுகளில் கொண்டு வந்திருக்கலாம், அதை ஏன் செய்யவில்லை.
தேர்தல் வரும் போது மட்டும் தான் மாநில உரிமை பற்றி பேசுவார்கள். திமுகவால் மீனவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். RTI மூலம் தான் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தெரிந்து கொண்டதாக அண்ணாமலை தெரிவித்தற்கு அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளட்டும் என்றார். பாமகவால் தான் அதிமுக ஆட்சி அமைக்க முடிந்தது என்று அன்புமணி ராமதாஸ் பேசியது குறித்த கேள்விக்கு, நன்றி உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும் யாரால் யார் வந்தார்கள் என்று. அம்மா இல்லையென்றால் அங்கீகாரம் என்பதே பாமகவுக்கு இல்லை. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் தான் அதிகம், நாங்கள் யார் முதுகிலும் சவாரி செய்யவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ் தன் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கோ பதவிக்கோ வர மாட்டார்கள் என்று தெரிவித்தார் அப்படி வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்றார், இப்போது பாமக கட்சியினர் தான் சவுக்கு எடுத்து அடிக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்புக்கு சரி என்று சொன்னதால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்றார். தொடர்ந்து கடைவீதிகளில் கடை வைத்துள்ள உரிமையாளர்களிடம், மற்றும் வாகன ஓட்டிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.