திமுக விரும்ப விண்ணப்பம்: துரைமுருகன் அறிவிப்பு

திமுக விரும்ப  விண்ணப்பம்:  துரைமுருகன் அறிவிப்பு

துரைமுருகன்

திமுக வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் 50000ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும் என அக்கட்சியின் உடைய பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story