தென் சென்னையில் திமுக பிரச்சாரம்

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் செய்தார்.
சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் இன்று இரண்டாம் கட்டமாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரித்து வரும் தமிழச்சி தங்க பாண்டியனை வரவேற்கும் வகையில் நொச்சிக்குப்பம் பகுதி மக்கள் தனது வீட்டு வாசலில் உதயசூரியன் சின்னத்தை கோலமிட்டு வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story