தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா‌-வின் சொத்து மதிப்பு விவரம் !

தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா‌-வின் சொத்து மதிப்பு விவரம் !

ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் ரூ. 86 லட்சத்து 14 ஆயிரத்து 294, அவருடைய மகள் மயூரி வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 26 ஆயிரத்து 877 உள்ளது. இதேபோல் ஆ.ராசா பெயரில் பங்கு சந்தையில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 920, அவருடைய மகள் சார்பில் பங்குச்சந்தையில் ரூ.60 லட்சம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆ.ராசாவுக்கு சொந்தமாக ரூ. 52 லட்சத்து 63 ஆயிரத்து 488 மதிப்புள்ள 108 பவுன் நகையும், அவருடைய மகள் மயூராவுக்கு சொந்தமாக ரூ. 1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து 972 மதிப்புள்ள 397 பவுன் நகையும் உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆ.ராசா பெயரில் அசையும் சொத்தாக ரூ.3 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரத்து 894, அவருடைய மகள் மயூரி பெயரில் ரூ. 2 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 218 உள்ளது. இதேபோல் அசையா சொத்தாக ஆ.ராசா பெயரில் ஒன்றுமில்லை. முன்னோர் வழி வந்த கூட்டு குடும்ப சொத்தாக ரூ.9 லட்சத்து 79 ஆயிரத்து 58, அவருடைய மகள் மயூரி பெயரில் ரூ.15 லட்சத்து 43 ஆயிரம் அசையா சொத்தாக உள்ளது. பெரம்பலூரில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரம்பரை வீடு உள்ளது. ஆ.ராசாவுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.19 லட்சத்து 484 கடன் உள்ளது. இதற்கிடையே ஆ.ராசா ரூ.25 லட்சத்து 22 ஆயிரத்து 107 அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.

Tags

Next Story