அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நிர்வாகிகளுடன் சந்திப்பு

அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நிர்வாகிகளுடன் சந்திப்பு

திமுக வேட்பாளர் சந்திப்பு

அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஜெகத்ரட்சகன் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நெமிலியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன்,

பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாதேவி சரவணன், கவிதா சீனிவாசன், பேரூர் செயலாளர்கள் ஜனார்த்தனன், சீனிவாசன், நெமிலி நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story