நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை
அறிவாலயம்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்திப்பு நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு தங்கம் தென்னரசு , உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கிருஷ்ணகிரி, திருவள்ளூர் , கோவை, சேலம், நீலகிரி , திருப்பூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் நேற்று நாமக்கல், ஈரோடு தொகுதிகளுக்குட உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனையில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட மாநகர நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர்,நகர் மன்ற தலைவர், துணைத்தலைவர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்.