மத்திய அரசு நிதியை திமுக அரசு சரியாகக் கையாளவில்லை - ஜி.கே. வாசன்

மத்திய அரசு நிதியை திமுக அரசு சரியாகக் கையாளவில்லை - ஜி.கே. வாசன்

ஜி.கே. வாசன் பிரசாரம்  

மத்திய அரசு கொடுத்த நிதியை மாநில அரசு சரியாகக் கையாளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மக்களை ஏமாற்றுகின்ற அரசு திமுக அரசு. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசோ மகளிா் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என ஜி.கே. வாசன் பேசினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் எஸ்.டி.ஆா். விஜயசீலனை ஆதரித்து திருச்செந்தூரில் மேல ரத வீதி - தெற்கு ரத வீதி சந்திப்பில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு ஜி.கே. வாசன் பேசியது: இப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எஸ்.டி.ஆா். விஜயசீலன் பல்வேறு உதவிகள் செய்தாா். இப்போதைய எம்.பி. மத்திய அரசை எதிா்க்கட்சியாகப் பாா்க்காமல் எதிரிக்கட்சியாகப் பாா்ப்பதால் இத்தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்கள் வருவதில்லை. இதுகுறித்து அவா் தில்லியில் பேசுவதில்லை என்பதுதான் உண்மை. அவா் எப்படி மக்கள் பிரச்னைகளைத் தீா்ப்பாா்?

இங்கு மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற வேண்டுமெனில் சைக்கிள் சின்னத்தில் வாக்களியுங்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அமைச்சா்கள் இருந்தும் மழை வெள்ளத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் சரியாக எடுக்கவில்லை என மக்கள் கேட்கின்றனா். மத்திய அரசு கொடுத்த நிதியை மாநில அரசு சரியாகக் கையாளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மக்களை ஏமாற்றுகின்ற அரசு திமுக அரசு. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசோ மகளிா் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. என்றார்.

Tags

Next Story