திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

திமுகவுடனான மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் முகைதீன் தலைமையில் , மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாசித், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜகான் ஆகியோர் திமுக உடனான முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு கலந்து கொண்டனர் பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியையே மீண்டும் திமுகவிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story