தேர்தலை சந்திக்க திமுக எப்போதும் தயார் - அமைச்சர் துரைமுருகன்

தேர்தலை சந்திக்க திமுக எப்போதும் தயார் - அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் 

எந்த நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது. திமுக கொள்கைக்காக உருவாக்கப்பட இயக்கம், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம் இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது . இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர். முன்னாள் பிரதமர்,தேவகவுடா, பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்த போதும். இப்போதும் கூட, தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தர கூடாது என்பதில் வைராக்கியமானவர். அவர் இடத்தில் இருந்து தமிழகத்திற்கு சாதமான வார்த்தைகள் வராது . காவிரி பிரச்சனை தொடர்பாக டிரிப்யூனல் அமைப்பதை எதிர்த்தார் .

டிரிப்யூனல் கஜெட்டில் போடுவதை எதிர்த்தார் . காவிரி பிரச்சினையில் அவர் எப்பொழுதும் தமிழகத்திற்கு எதிராகவே செயல்படுவார். பிரதமர் மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என தேவகவுடா கூறுவது, அவருடைய பிள்ளைகளின் அரசியல் ஆதாயத்திற்காக தேவகவுடா கூறுகிறார். அவர் ஆதாயத்திற்காக பேசுகிறாரோ வெறுப்பாக பேசுகிறாரோ ஆனால் தமிழகத்திற்கு எதிர்ப்பாக தான் பேசுவார் .

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு , அவர் வெளியிடட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், எந்த நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது. திமுக கொள்கைக்காக உருவாக்கப்பட இயக்கம். கூட்டணி பற்றிய செய்தியாளர்கள் கேட்டதற்கு , திமுக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம் இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது . இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம் . தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டதற்கு, அவர் எதிர்க்கட்சி. எப்போது தமிழகம் நன்றாக உள்ளது என கூறப்போகிறார் அவர் அப்படி தான் கூறுவார். என துரைமுருகன் கூறினார் .

Tags

Next Story