திமுக - மார்க்சிஸ்ட் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை

திமுக - மார்க்சிஸ்ட் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை

திமுக - மார்க்சிஸ்ட் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை

திமுக - மார்க்சிஸ்ட் இடையே ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்ற நிலையில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இரு தரப்பும் முக்கிய ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதுவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் மதிமுகவினர் இரண்டு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு திமுக ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுப்பதாக முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் இன்றே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டு வென்றது. மேலும் இந்த தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story