திமுக இளைஞரணி மாநாடு - பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

திமுக இளைஞரணி மாநாடு - பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

தி.மு.க. இளைஞரணி மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்

தி.மு.க. இளைஞரணி மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற 24-ந் தேதி நடைபெறுவதையொட்டி, அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் 100 அடி உயர கொடிக்கம்பமும் நடப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் மாநாட்டு திடலில் என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக நேற்று முன்தினம் மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, அவர் வரும் பாதை குறித்து கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் மாநாட்டு உபசரிப்பு குழு ஆலோசனை கூட்டம் மாநாட்டு திடலில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், குழு செயலாளர் ஜி.கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒருங்கிணைப்பாளர்கள் நாமக்கல் பாலாஜி, சுரேஷ்குமார், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story