பாஜக தொண்டனுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும் - அண்ணாமலை

பாஜக தொண்டனுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும் - அண்ணாமலை

அண்ணாமலை 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், பாஜகவின் கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றினர். இதனால் கொடிக்கம்பத்தை அகற்றக் கூடாது என பாஜகவினர் சாலையில் அமர்ந்து தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து நொறுக்கினார்கள். இருப்பினும் அண்ணாமலை வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை போலீசார் அகற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவ.1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். "பாஜக தொண்டனுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story