குஷ்பூவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்

குஷ்பூவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்

உருவ பொம்மை எரிப்பு 

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவாக பேசிய பாஜக நிர்வாகி குஷ்பூவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து திமுக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. தமிழகத்தில் தி.மு.க. அரசு சார்பில் மகளிருக்கு உரிமை தொகை எனும் பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அவமதிக்கும் வகையில் திரைப்பட நடிகை குஷ்பூ பேசியதற்கு எதிர்ப்பு மாநிலம் முழுதும் வலுத்து வருகிறது.

குஷ்பூவை கண்டிக்கும் விதமாக குமாரபாளையம் தி.மு.க. சார்பில், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில், மகளிரணி நிர்வாகிகள் ராதிகா, தேவிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று, குஷ்பூவின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். குஷ்பூவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. உருவ பொம்மை எரித்த போது, போலீசார் அதனை தடுக்க முயற்சித்தனர்

Tags

Next Story