காங்கிரசுக்கு 10 தொகுதிகளை வாரி கொடுத்த திமுக!

காங்கிரசுக்கு 10 தொகுதிகளை வாரி கொடுத்த திமுக!
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கிய திமுக   
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 19 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்த திமுக 21 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தோழமை கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்து வரும் திமுக, தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் ஏற்கெனவே கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி உறுதியாக தொகுதிகள் பங்கிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

இருவரும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மக்கள் நலன் கருதி திமுகவுடன் கை குலுக்கியுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பேச்சு வெளியானதில் இருந்து இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ், திமுகவுடன் அதிக தொகுதிகளை கேட்டு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இதனால், திமுக மற்றும் காங்கிரஸுடன் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. ஏற்கெனவே திமுகவுடன், மக்கள் நீதி மய்யம் இணைவதாக பேச்சுகள் எழுந்த நிலையில் காங்கிரஸின் தொகுதி ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தமல் இருந்தார். தற்போது மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு தொகுதி கொடுத்துள்ளதால், காங்கிரஸின் கூட்டணியும் உறுதியாகி, தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவை, புதுச்சேரியில் ஒரு மாநிலங்களவை என மொத்தமாக 10தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின்னரே தொகுதி பங்கீட்டை திமுக உறுதி செய்தனர்.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 19 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்த திமுக 21 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்பங்கீடு விவரம்:

திமுக - 21

காங்கிரஸ் - 9 + புதுச்சேரி

விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்- தனித்தொகுதிகள்)

சிபிஐ - 2

சிபிஎம் - 2

மதிமுக -1

இயூமுலீக் - 1 (ராமநாதபுரம்)

கொமதேக - 1 (நாமக்கல்)

Tags

Next Story