திமுக - விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுது. இந்த பேச்சு விசிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பனையூர் பாபு, ஆளூர் ஷானவாஸ், சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவின் சார்பில் டி ஆர் பாலு ஆ ராசா, அமைச்சர் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர் . சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகளை திமுக-விடம் விருப்ப பட்டியலாக வழங்கப்பட்டுள்ளதாக தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story