தேர்தல் நடத்தை விதிமுறைகளை திமுக மீறுகிறது: அதிமுக சார்பில் மனு
அதிமுக நிர்வாகி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் 2024 ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார்கள். நேற்று மதுராந்தகத்தில் உதயநிதி பேசும் போது, கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் சிலைகள் மூடி வைக்கப்பட்டு இருந்ததை திறந்து மரியாதை செய்துவிட்டு,
அதன் பின் பிரச்சாரம் மேற்கொண்டதாக தகவல் வந்தது. உதயநிதி பேசிக்கொண்டு இருக்கும் போது கூட சிலைகள் திறக்கப்பட்டு தான் இருந்தது. அதே நேரம் எம் ஜி ஆர் சிலை மூடப்பட்டு இருந்தது. பேருந்து நிறுத்தங்களில் முதலமைச்சரின் சாதனைகள், ஆட்சி கால திட்டங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் இதுவரை அகற்றாமல் இருக்கின்றன. செ
ன்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஒளி, ஒலி உள் அரங்கில், செயற்கை நுண்ணறிவு மூலமாக, கருணாநிதி திருவாரூரில் இருந்து சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொண்டது தொடர்பான ஒளி,ஒலி காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. அதே போல இரவு நேரத்தில் கருணாநிதியை அடக்கம் செய்யப்பட்டுள்ள, அவரது நினைவிடத்தில் திமுக சின்னம் வெளிச்சமூட்டபட்டுள்ளது இந்த புகாரை நாங்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளதை அடுத்து, அவரும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.
பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்தி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக எந்தெந்த வகையில் எல்லாம் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட முடியுமோ, அந்தந்த விதத்தில் எல்லாம் விதிகளை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.