பசுக்கள் தானம்:உயர்நீதிமன்றம் உத்தரவு

பசுக்கள் தானம்:உயர்நீதிமன்றம் உத்தரவு
கோசலையில் வைக்கப்பட்டுள்ள பசுக்கள்
கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட பசுக்களில், எத்தனை பசுக்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? என்று அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட பசுக்களில், எத்தனை பசுக்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? என்பது குறித்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு வழங்க தடைக்கோரி, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்கள் அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அர்ச்சகர்கள், பூசாரிகள், சுய உதவி குழுக்கள், கோ சாலைகளுக்கு வழங்கப்படுகிறது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. தானமாக பெற்ற பசுக்களை கோவில்கள் தான் பராமரிக்க வேண்டும். தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அவர்களிடம் தான் இருக்கின்றனவா என யார் கண்காணிப்பர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story