நீட் தோ்வை ஒழிப்போம் என மாணவா்களை குழப்ப வேண்டாம்: பிரேமலதா

நீட் தோ்வை ஒழிப்போம் என மாணவா்களை குழப்ப வேண்டாம்:  பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த்

கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று வந்த தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தென்மாவட்டங்களில் நிகழும் கொலைக் குற்றங்களுக்கு கனிமவளக் கொள்ளையும், மதுப் பழக்கமுமே முக்கிய காரணங்களாக உள்ளன. தீபாவளி நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ. 500 கோடியை எட்டியது, தமிழக மக்கள் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதைக் காட்டுகிறது. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. 2 நாள் மழைக்கே, சென்னை முழுவதும் தண்ணீா் தேங்கிநிற்கிறது. தமிழக மாணவா்கள் நீட் தோ்வை எளிதாக எதிா்கொள்ளும் திறமை பெற்றவா்கள். எனவே, நீட் தோ்வை ஒழிப்போம் எனக் கூறி மாணவா்களை தமிழக அரசு குழப்ப வேண்டாம். அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தோ்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தகுதியுள்ளோருக்கு மட்டுமே என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கின்றனா். இதனால், பலா் ஏமாற்றமடைந்துள்ளனா். சநாதனம் குறித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டு எதிா்ப்புகளை சம்பாதித்துள்ளாா். எனவே, மதம், ஜாதி, உணவுப் பழக்கம் குறித்துப் பேசும்போது கவனமாக பேச வேண்டும். மக்களவைத் தோ்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து கட்சித் தலைவா் விஜயகாந்த் ஜனவரி மாதம் அறிவிப்பாா் என்றாா்.

Tags

Next Story