ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி - அமைச்சர் சக்கரபாணி

அமைச்சர் சக்கரபாணி 

ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் 9,900 கடைகள் பகுதி நேரமாகவும் மீதமுள்ள கடைகள் முழு நேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன. 2.23 கோடி பேர் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன.

ரேஷன் கடை மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அது போல் பொங்கல் பரிசும் இந்த ரேஷன் கடைகள் மூலமே வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக கொண்டு போய் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் விரைவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வீடாக டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டோர் டெலிவரி செய்ய பொருட்களை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும். இதனால் பொருட்கள் வீணாகாமல் மக்களுக்கு சரியான அளவில் கிடைக்கும். இதற்காக 6 மில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கி வரும் 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story