சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு டபுள் நற்செய்தி!
ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நாளை (15ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து சபரிமலை பம்பையில் உள்ள ஹில்டாப் மற்றும் சக்குபாலம் பகுதிகளில் பக்தர்களின் சிறிய ரக வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் காவல் துறையினரால் செய்யப்பட்டுள்ளன. மாத பூஜை காலங்களில் மட்டும் பம்பையில் உள்ள வாகன நிறுத்தங்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி வழக்கு தொடரப்பட்ட்ட நிலையில் வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன் பம்பையிலுள்ள ஹில்டாப், சக்குபாலம் பகுதியில் சிறிய ரக வாகனங்கள் 800 வரை நிறுத்த அனுமதி கொடுத்து உத்தரவிட்டது.