உடையார்பாளையம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உடையார்பாளையம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர், ஜூன். 9- உடையார்பாளையம் தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைக்கள நாட்டார் தெருவில் அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக இருந்ததை அகற்றி ஆகம விதிப்படி புதிதாக கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட்டன.

முதல் நாள் அஷ்ட பந்தன மருந்து சாற்றி சுவாமி ப்ரதிஷ்டை செய்யப் பட்டது பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பங்கேற்றனர். புனித நீரான கங்கை தீர்த்தம் காவேரி தீர்த்தம் கும்பகோணம் மகாமக குலத்தின் தீர்த்தம் ராமேஸ்வரம் கோடி தீர்த்தம் காவேரி கொள்ளிடம் ஆகிய புனித நதிகள் உள்ளிட்ட புனித நீர்களை பூஜை செய்து ஏகாக்னி குண்டங்கள் வளர்ப்பு வேத.கோ.சரவணன் சர்மா தலைமையில் 9 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கல வாத்தியங்கள் முழங்க பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மேல் நெல் பூக்கள் நவதானியங்களும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் 2000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழா சார்பில் அன்னதான வழங்கப்பட்டது இன்று இரவு சாமி வீதியுலா நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டதாகும்.

Tags

Next Story