குண்டுக்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது!
சாத்தான்குளம் அருகே உரிய அனுமதியின்றி டிப்பர் லாரியில் கொண்டு சென்ற குண்டுக்கல் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து உரிய அனுமதியுடன் குண்டுக்கல், ஜல்லி கற்கள் டிப்பர் லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி(25) உள்ளிட்ட வருவாய் துறையினர் பனைகுளம் பகுதியில் வந்த டிப்பர் லாரியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாத்தான்குளம் பகுதியில் இருந்து வருவாய்துறையின் அனுமதி இன்றி டிப்பர் லாரியில் குண்டுக்கல் ஏற்றிச்செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் மெற்றில்டா ஜெயராணி வழக்கு பதிவு லாரி டிரைவர் குரும்பூர் அருகேயுள்ள புறையூர் கம்மன் குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் மகன் மாயாண்டி பிரபு (22) என்பவரை கைது செய்து டிப்பர் லாரி, இரண்டரை யூனிட் குண்டுக்கல் ஆகியவை பறிமுதல் செய்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி, லாரி உரிமையாளர் தெற்கு மாறாந்தலை சேர்ந்த ரா. ரகுராமன் என்பவரை தேடி வருகின்றார்.