திருச்சியில் துரை வைகோ - வலியுறுத்தும் நிர்வாகிகள்
மதிமுக தலைமை அலுவலகம்
சென்னையில் நடந்த மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துரை வைகோ திருச்சியில் போட்டியிட வேண்டும் எனவும், தனிச்சின்னம் கிடைக்கப் பெறாத நிலையில் பொது சின்னத்தில் போட்டியிட வேண்டும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு பின்னர் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதில் துரை வைகோ திருச்சியில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். திமுக -வினர் மதிமுக-விற்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தனிச்சின்னம் கிடைக்கப் பெறாத நிலையில் பொது சின்னத்தில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். வைகோ-விற்கு ராஜ்ய சபா பதவி வழங்குவது குறித்து தேர்தலுக்கு பிறகு ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story