ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்; செப்., 30 வரை நீட்டிப்பு

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்; செப்., 30 வரை நீட்டிப்பு

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறையை செப்., 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறையை செப்., 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறையை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு. இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கைகள் பெறப்பட்டது. ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்று அரசு தரப்பு தெரிவித்தது.

நீலகிரி மாவட்டத்துக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்வோருக்கு ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய நிலையில், கொடைக்கானலில் எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை கொடைக்கானலிலும் பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags

Next Story