ஈஸ்டர் பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஈஸ்டர் பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
ரயில் நிலையம் 
தாம்பரம்- நாகர்கோவில் இடையே ஈஸ்டர் பண்டிகையையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது .

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "மார்ச் 28ந் தேதி வியாழக்கிழமை இரவு 10:20 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் வண்டி எண் 06053 அதிவிரைவு ரயில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:55 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மே

லும் 29ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06041 அதிவேக விரைவு ரயில் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 5:20 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 7:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் 30ந் தேதி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் வண்டி

எண் 06042 சிறப்பு அதிவிரைவு ரயில் மாலை 5:45 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. அதுபோல 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06054 சிறப்பு அதிவிரைவு ரயில் மாலை 5:45 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் 1ந் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றயும்" என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story