திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு

திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு

  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகி, திஹார் சிறையிலுள்ள ஜாபர் சாதிக்கை இரண்டு நாட்களுக்கு விசாரிக்க அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகி, திஹார் சிறையிலுள்ள ஜாபர் சாதிக்கை இரண்டு நாட்களுக்கு விசாரிக்க அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை கடந்த மார்ச் மாதம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் (NCB) கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக கடந்த இரு மாதத்திற்கு முன்பே ஜாபர் சாதிக் வீடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை இரண்டு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் முடிவில் கைது செய்துள்ளனர்.

Tags

Next Story