இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை!!

இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை!!
X

shankar

எந்திரன் திரைப்படம் கதை விவகாரத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

'எந்திரன்' திரைப்படம் கதை விவகாரத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் ரூ.11.50 கோடியை ஊதியமாக பெறவில்லை. மற்ற பணிகளுக்காகவும் ஊதியம் பெற்ற நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என்று சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அமலாக்கத்துறையிடமே வழக்கை எதிர்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப். 21-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags

Next Story