மோகனூர் மணல்குவாரியில் அமலாக்கத்துறை தொடர் ஆய்வால் பரபரப்பு

மோகனூர் மணல்குவாரியில் அமலாக்கத்துறை தொடர் ஆய்வால் பரபரப்பு

மணல்குவாரி 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் உள்ள மணல் குவாரியில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 வது முறையாக ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த மாதம் தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள், கான்ட்ராக்டர்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைந்துள்ளது. அங்கு எடுக்கப்படும் மணல், மோகனூர் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து காண்ட்ராக்டர் மூலம் லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த குவாரியில் முறைகேடாக மணல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 12ம் தேதி மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்புக் கிடங்கு மற்றும் ஒருவந்தூர் மணல் குவாரியிலும் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இம்மாதம் 10ம் தேதி 2வது முறையாக ஒருவந்தூர் குவாரி மற்றும் செவிட்டுரங்கன்பட்டி மணல் கிடங்கு ஆகியவற்றில் கைப்பற்றிய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளவை சரியாக உள்ளதா என ட்ரோன் கேமரா உதவியுடன் அமலாக்கத் துறையினர் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக் துறையினர் துணை ராணுவ பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு மணி நேர ஆய்வுக்குப் பின் அமலாக்கத் துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story