அதிமுக எப்போதும் ஒரிஜினலாக தான் உள்ளது - எடப்பாடி பழனிசாமி

சிறுபான்மை மக்களுக்காக எப்போதும் நாங்கள் குரல் கொடுப்போம்,அதிமுக எப்போதும் ஒரிஜினலாக தான் உள்ளது என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



சேலத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகிய இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,அரசு சரியான நிர்வாகம் செய்யாவிட்டால் அதன் பாதிப்பு மக்களை வந்து சேரும் அனைத்து மளிகை பொருட்களும் 40 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்ச்சமாக இருந்தனர். இப்போது எங்கே பார்த்தாலும் போதை பொருள் விற்பனை பெண்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி விட்டனர். 2.O, 3.O, 4.O, என சொல்லி சொல்லி ஓ போட்டுவிட்டார். சிறுபான்மை மக்களுக்காக எப்போதும் நாங்கள் குரல் கொடுப்போம். இன்னும் அதிமுக பாஜகவின் பி டீமாக உள்ளது என்று திமுக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. அதிமுக எப்போதும் ஒரிஜினலாக தான் உள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது அதிமுக ஆட்சியில் எவ்வளவு சாலைகள், பாலங்கள், பாதாள சாக்கடை திட்டம் ,புதைவட கம்பி வசதி என ஏராளமாக திட்டம் தந்தோம். அதிமுக அதிக கடன் வாங்கியதாக ஸ்டாலின் கூறுகிறார் திமுக வந்து ஒரு திட்டம் கூட நிறைவேற்றவில்லை அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் திறந்து வைத்து நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்துக் கொள்கிறார்.அதிமுக கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கியவர் ஸ்டாலின். சேலம் மாநகரத்தில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் 18 அம்மா மினி கிளினிக் தந்தோம். மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான திட்டத்தை இன்றைய ஆட்சியாளர்கள் ரத்து செய்து வருகின்றனர் இதுதான் இவர்களின் முதியோர் உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்றனர். ஆனால் இப்போது நிபந்தனை வைத்து தருகின்றனர். நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் இப்போது அனைவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த கையெழுத்தை எங்கு கொண்டு போய் தருவார்கள்? இவர்களின் வாக்குறுதியை நம்பி பலர் உயிரிழந்தது தான் மிச்சம் .ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போராட்டம் நடத்துவதாக உதயநிதி கூறுகிறார். ஜல்லிக்கட்டு மாநில பிரச்சினை நீட் தேர்வு தேசிய பிரச்சனை. நீட் தேர்வு ரத்து ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினால் மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு போலியான நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். ஏழை மாணவர்கள் பயன் பெறுவதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் தமிழகம் முழுவதும் 2160 பேர் மருத்துவம் படிக்கின்றனர். இது அதிமுகவின் சாதனை உதயநிதியை அமைச்சர் ஆகக்கியது தான் திமுகவின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.


Tags

Next Story