திமுக ஆட்சியில் வன்கொடுமை நீடிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு !!

திமுக ஆட்சியில் வன்கொடுமை நீடிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு !!

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர் கதையாகி விட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாட்டை பெண்கள் வெளியில் நடமாட அச்சப்படும் அளவிற்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பள்ளியில் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக சிறுமி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்ட நிலையில் நாலு மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரிய வந்துள்ளது.

காவல்துறை விசாரணையில் இந்த கொடூர செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமையை இதுபோன்று வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியில் சிற்றார்கள், இளைஞர்கள் குடிபோதையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து இருக்கின்றன.

குற்ற செயல்களை கூட சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீது எவ்வித அச்சமும் இன்றி செய்ய துணிந்து விட்டன சமூக விரோதிகள். அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின் இந்த திமுக ஆட்சியில் தொடராக நடைபெற்று வரும் வன்கொடுமைக்கு எதிரான குற்றங்களை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தார்.

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்த தவறிய திமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல் ஒரு தந்தை என்கின்ற அக்கறையுடன் கண்டிக்கிறேன். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் அவ்வாறு கூறினார்.

Tags

Next Story