தொண்டருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

தொண்டருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

தூத்துக்குடியில் காலை அறுத்து கொண்ட அதிமுக தொண்டருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.


தூத்துக்குடியில் காலை அறுத்து கொண்ட அதிமுக தொண்டருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். 

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் விரக்தி அடைந்து தேர்தல் சவாலால் காலை நறுக்கி இரத்தத்தை வடித்த அதிமுக தொண்டருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களில் போட்டியிட்டது. இதில் அதிமுக கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என மாற்றுக் கட்சியினரிடம் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் செல்வகுமார் (75) சவாலாக கூறியிருந்தார்.

தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததை தொடர்ந்து தனது சவால் தோற்றுவிட்டது என்று விரக்தி அடைந்த அதிமுக தொண்டர் செல்வகுமார் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் வைத்து தனது பின்னங்கால் பாதத்தை அறுத்து ரத்தத்தை படிய விட்டு சவாலை நிறைவேற்றியுள்ளார். இது பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்திருந்தது இதை அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவரை அழைத்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

அப்போது தொண்டர்கள் யாரும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.  மேலும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக தொண்டர் செல்வகுமாரை மாவட்ட கழகம் அழைத்து மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை , மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், சாம்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story