வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிமுக முகவர்கள் கவனமாக இருக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !!
எடப்பாடி பழனிச்சாமி
ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அடையாள அட்டையுடன் வாக்கு என்னும் மையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் மாறுதல்கள் இருக்கும் பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையை தொடராமல் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என கூறினார். வாக்கு என்னும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாக முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும் எனவும் குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.