கொங்குவில் கால் வைத்ததுமே பதறிப்போன எடப்பாடி..

கொங்குவில் கால் வைத்ததுமே பதறிப்போன எடப்பாடி..

சசிகலா

அதிமுக சசிகலாவிற்கு சாதகமாகுமா....

2016-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இணைந்தே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.

2017-ம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா சிறைக்கு சென்றார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி இருந்தார் சசிகலா.

அப்போது 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார்.

சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.

தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விகே சசிகலா, அதிமுகவை எப்படியாவது ஒன்றுசேர்ப்பேன் என்று சொல்லி வருகிறார்.. அத்துடன், அவரது அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வும் ஆரம்பமாகி உள்ளது.

கோவை, ஈரோடு, பெருந்துறை என ஒரு இடம்விடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்..

முன்னதாக கோவை விமான நிலையத்தில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ப்போது கொங்கு மண்டல பகுதி மக்கள் நல்லவர்கள், அவர்கள் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார்கள். நான் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்திக்க உள்ளேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. அனைவரையும் ஒன்று சேர்ப்பதுதான் எனது வேலை. பாராளுமன்ற தேர்தலுக்கள் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.

இப்படித்தான், பெருந்துறை பைபாஸ் சாலையில் சசிகலா வந்தார்.. அப்போது, 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு தந்தனர்.. பிறகு திடீரென "அம்மா, நீங்க கட்சியை உடனே கையில் எடுங்க" என்று திடீரென கோஷமிட்டனர். உடனே அவர்களை திரும்பி பார்த்த சசிகலா, மெல்ல கை அசைத்தார்.. பிறகு அவர்களை பார்த்து கும்பிட்டபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார். கொங்கு மண்டலத்துக்குள் திடுதிப்பென்று இந்த சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொள்ளவில்லையாம். எல்லாம் முன்பே திட்டமிட்டதுதான் என்கிறார்கள். இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

கொங்கு மண்டல செல்வாக்கில் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்டம் காட்டுகிறார். ஆனால், கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைத் தவிர, அச்சமூகத்தில் உள்ள மற்ற கவுண்டர் சமூகத்தினர் எடப்பாடியை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக, வேட்டுவ கவுண்டர்கள், ஊராளி கவுண்டர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கவுண்டர் சமுக பிரிவினர் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள்.

கொங்கு வேளாளார்களும் மற்ற பிரிவினரை தீண்டத்தகாதவர்களாகத்தான் நடத்துகின்றனராம். எடப்பாடிக்கு எதிராக இந்த பிரச்சனை இருப்பதால், கொங்கு வேளாளர் அல்லாத அச்சமூகத்தின் மற்ற பிரிவினரை தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வரவும், அவர்களை எடப்பாடிக்கு எதிராக ஒன்றிணைக்கவுமான முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் சசிகலா இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்" என்கிறார்கள்

எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்துக்குள்ளேயே அதிருப்திகள் வெடித்துள்ளதும், அந்த அதிருப்திகளை தனக்கு சாதகமாக சசிகலா பயன்படுத்தி கொள்ள முனைப்பு காட்டுவதும் பரபரப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

Tags

Next Story