பட்டாசு வெடித்துபோது பயந்து ஓடிய வாலிபர்: சாக்கடையில் விழுந்த வீடியோ

லியோ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கில் பட்டாசு வெடித்துபோது பயந்து ஓடிய வாலிபர் சாக்கடையில் விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் திரையிடப்பட்டது இதனால் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். மேலும் விஜய் கட் அவுட்டிற்க்கு பாலபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் கையில் பட்டாசை பிடித்து வெடிக்க செய்தார் இதனால் பட்டாசில் தீப்பொறி அந்த பகுதி முழுவதும் கொட்டியது பட்டாசு தன் மீது பட்டு விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த வாலிபர் பயந்து ஓடி உள்ளார் அப்போது அருகில் இருந்த சாக்கடையில் தவறி விழுந்துவிட்டார். ஆழமான சாக்கடை என்பதால் அவரால் மேலே எழுந்து வர முடியவில்லை. ஏராளமான ரசிகர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபோதும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.

பிறகு சிறிது நேரம் கழித்து சாக்கடையில் இருந்த வாலிபர் தானாக மேலே ஏறி வந்தார் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story