தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு

பைல் படம் 

தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொட்டலூரணி கிராம மக்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் மீன் பதப்படுத்தும் ஆலை அகற்றக் கோரி கிராம மக்கள் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் 931 வாக்காளர்கள் உள்ள நிலையில் தாங்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர.

பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக மீனவர்நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்ற போது கிராம மக்கள் அமைச்சரை திருப்பி அனுப்பினர் இதனால் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த கிராமத்திற்கு காரில் கள்ள ஓட்டு போட ஆயுதங்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலை பிடித்து காவல்துறையினர் கைது செய்து ஒரு வேனில் அழைத்துச் செல்லும் போது தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் வேன் மற்றும் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆயுதங்களுடன் வந்த கும்பல் இருந்த வேனின் கண்ணாடியை உடைத்தனர் .

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து அமைதி ஏற்படுத்தினர் கிராம மக்கள் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அந்த வாக்குச்சாவடியில் உள்ள 931 வாக்குகளில் தேர்தல் அலுவலர்கள் வாக்குகள் 20 மற்றும் பொதுமக்கள் வாக்குகள் ஒன்பது என மொத்தம் 29 வாக்குகள் மட்டுமே பதிவாகின இந்த நிலையில் பொட்டலூரனி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் உள்பட 50 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் இரண்டு பிரிவில் வழக்குகள் பதிவு செய்தனர்.

வி ஏ ஓ விஜயமூர்த்தி புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் மேலும் கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் தூத்துக்குடியில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story