அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கணும் - வைகோ

அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கணும் - வைகோ

தேர்தல் விதிமுறைகளை மீறும் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 

தேர்தல் விதிமுறைகளை மீறும் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

ஈரோடு பெரியார் நகரில் கணேசமூர்த்தியின் வீட்டிற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , உயிரிழந்த மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ , பாஜ.க தேர்தல் அறிக்கை கூறப்பட்டுள்ள எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற மாட்டார்கள் என்றும் தமிழ்நாட்டில் பா.ஜக எந்த தொகுதியில் வெற்றி பெற மாட்டார்கள் என்றார்.

பிரதமர் மோடி இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் செல்லாத வகையில் 9 முறை தமிழகத்தை வந்துள்ளார். இதனால் எந்த மாற்றமும் ஏற்படா போவதில்லை என்றும் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பின் போது வராத மோடி தற்போது ஒன்பது முறை வந்துள்ளார் என்றும் தமிழகத்தில் இரண்டு இடமாக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ஒன்பது முறை தமிழகத்தில் சுத்தி வருகிறார் என்றார். தமிழகத்தில் 40 க்கு 40 க்கும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற வைகோ , பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story