வக்கீலிடம் ரூ.67 ஆயிரம் பறிமுதல்
பணம் பறிமுதல்
கே வி குப்பம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 67,000 பணத்தை வழக்கறிஞரிடம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட பழைய கிருஷ்ணாபுரம் கிராமம், மகாதேவமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் வருவாய்த்துறை தனித்தாசில்தார் சாந்தி தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து குடியாத்தத்தை நோக்கி ஒரு கார் வந்தது. அந்தக் காரை மடக்கி அதிகாரிகள் சோதனைச் செய்தனர்.
காரில் இருந்த சென்னையை சேர்ந்த வக்கீல் முரளி மோகன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.67 ஆயிரம் வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கே.வி.குப்பம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story