ராணிப்பேட்டைக்கு தேர்தல் பொது பார்வையாளர் வருகை

ராணிப்பேட்டைக்கு தேர்தல் பொது பார்வையாளர் வருகை

தேர்தல் பொது பார்வையாளர் வருகை

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக சுனில் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த தேர்தல் பொது பார்வையாளரை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வளர்மதி சுற்றுலா மாளிகையில் வரவேற்றார். பின்னர் சுற்றுலா மாளிகையில் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினர். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story