வடசென்னை சம்பவம் - தேர்தல் அலுவரிடமிருந்து எழுத்து பூர்வ விளக்கம்

வடசென்னை சம்பவம் - தேர்தல் அலுவரிடமிருந்து எழுத்து பூர்வ விளக்கம்

சத்ய பிரதாசாகு 

வடசென்னையில் நடந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அலுவரிடமிருந்து எழுத்து பூர்வமான விளக்கம் பெறப்பட்டுள்ளது அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்தார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தூர்தர்ஷன் நிகழ்ச்சி மேடையில் பேசியது, தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படை தன்மையோடு செய்து வருகிறது. ஊரகப் பகுதியில் உள்ள வாக்காளர்கள் கஷ்டங்களையும், சிக்கல்களையும் தாண்டி வெளிவந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் இந்த தேர்தலில் ஊரகப்பகுதிகளில் இருந்து வெளிவந்து எல்லா பகுதி மக்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

50,000 க்கும் மேல் பணம் எடுத்து செல்பவர்களுக்கு தான் தேர்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டில் தேர்தல் நேரங்களில் பணத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. தேர்தல் மிகப்பெரிய சவால்கள் இல்லை. தயாராக இல்லையென்றால் தான் தயங்க வேண்டும்.இந்திய தேர்தல் ஆணையம் எல்லாவற்றிக்கும் தயாராக இருக்கக்கூடிய காரணத்தால் தேர்தலில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படாது. அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை ஆனால் அதே நேரத்தில் எந்த நபருக்கும் பிரச்சனை இல்லாமலோ அவருடைய அனுமதி இல்லாமலோ அவரிடம் சென்று வாக்கு சேகரிக்க கூடாது.

தேர்தல் நேரங்களில் எல்லா அலுவலர்களும் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்தல் நடைபெறும் அறையில் புகைப்படம் எடுக்கவோ ,வீடியோ எடுக்கவோ அனுமதி இல்லை.அரசியல் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் அலுவலர்களை கையாள வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் அன்று தனியார் நிறுவனங்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு அறிவுரை வழங்கினார்.

வடசென்னையில் நடந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அலுவரிடமிருந்து எழுத்து பூர்வமான விளக்கம் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் காணொளி வாயிலாக பதற்றமாக செயல்படக்கூடிய சூழ்நிலைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றார்.

Tags

Next Story