பதற்றமான வாக்குச்சாவடியில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
பதற்றமான வாக்குசாவடிகள் ஆய்வு
வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியில் தேர்தல் பொதுப்பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 227 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதையொட்டி ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாவட்ட எஸ்பி மணிவண்ணன், உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கடி அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரூபேஷ்குமார் பதற்றமான வாக்குச்சாவடியான வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது உதவி கலெக்டர் கவிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story