பாரதீய ஜனதா கட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் :கனிமொழி பேச்சு!

பாரதீய ஜனதா கட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் :கனிமொழி  பேச்சு!

கனிமொழி பேச்சு

"வெள்ள நேரத்தில் தமிழ்நாட்டிற்கு நிவாரணம் தராமல் தமிழ்நாட்டை வஞ்சித்த பாரதீய ஜனதா கட்சியை வீட்டுக்கு அனுப்பும் 2024 தேர்தல்"
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணிவேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி நேற்று காலை குரும்பூரில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர் நாலுமாவடி, இடையன்விளை ஆகிய கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார். மூக்குப்பீறியில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில், "மூக்குப்பீறியில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:- வரவி ருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர் தல். தமிழ்நாடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தமிழ்நாட்டை வந்து பார்வையிடவும் இல்லை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் தரவும் இல்லை. எனவே தமிழ்நாட்டை வஞ்சித்த பிரதமர் மோடி அவர்களுக்கு பாடம் புகட்ட ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜகவை கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனவே தூத்துக் குடிமக்களாகியஉங்களின் அன்பை பெற்றிருக்கிற எனக்கு உதயசூரி யன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எனக்கு பணி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள், தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுகசெயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற் றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவ ரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பொறுப்பாளருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி கள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கூட்டணிகட்சிநிர்வாகிகள், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், துணைத் தலைவர் அருண் சாமுவேல், கவுன்சிலர்கள் அதிசயமணி, சாமுவேல், பிரதிநிதி எஸ்.டி.பி.தாமரை ஆகியோர்கலந்து கொண்டனர். முன்னதாக திமுக வேட்பாளருக்கு இடையன்விளை கிராமத்தில் கச்சனாவிளை ஊராட்சி மன்றத் தலைவர் கிங்ஸ்டன் தலை மையில் வேட்பாளருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின் மூக்குப்பீறி ஊராட்சி மன்றத் திற்குட்பட்டபூங்கா அருகில் ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு தலைமையில் காங். கமிட்டி தலை வர் செல்வின்,மாவட்ட திமுக பிரதி நிதி கலையரசு, ஊராட்சி செயலா ளர்கள் மோசஸ் கிருபைராஜ், முத்துவேல், பால்சாமி, டென்சிஸ், கோயில்ராஜ், மணிமாறன், முத்துகுமார், மகளிரணி அமைப்பாளர் எல்சி, காங். கமிட்டி செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story