விளக்கிக் கொள்ளப்பட்டது தேர்தல் நடத்தை விதிகள்!

விளக்கிக் கொள்ளப்பட்டது தேர்தல் நடத்தை விதிகள்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி முதல் கடந்த 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இதன்படி அனைத்து அரசு துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்த ஒரு சில சிறப்பு ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கூட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் மனுக்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த பெட்டியில் போட்டு வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று முதல் வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்றும் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். 3 மாதங்களுக்கு பிறகு நடந்த கூட்டம் என்பதால் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது மனுக்களை அளித்தனர்.

மேலும் தங்களது பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். முதல் நாளில் நேற்று 100க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்திருந்தன. ........

Tags

Next Story