சென்னையில் 22 நாளைக்கு ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள்..!
மின்சார ரயில்கள்
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12:50 மணி வரை செல்லும் ரயில்களும், இரவு 10:40 முதல் 11:59 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரம் இடையே காலை 9:30 மணி, 9:50, 10:10,10:30,10:50,11:10,11:30,11:50,12:10,12:30,12:50, அதேபோன்று இரவு நேரத்தில் 10:40,11:05,11:30,11:59 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது
கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு இடையே, காலை 10:45, காலை 11:10, பகல் 12 மணி, பகல் 12:50 மணி, மதியம் 1:30 மணி, மதியம் 1:55 மணி, இரவு 11.50 மணிக்கு, செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணி, காலை 10:30 மணி, காலை 11 மணி, 11 45 மணி, பகல் 12:30 மணி, பகல் ஒரு மணி, இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது