ஆரணி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ஆரணி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

கோப்பு படம்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று வேலை சம்பந்தமாக பைக்கில் வந்தவாசி - ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாடு ஒன்று குறுக்கே வந்தது. திடீரென அதன் மீது மோதி சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story