தமிழ்நாட்டில் 3 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை வழங்க மின்சார வாரியம் தகவல் !!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை வழங்க மின்சார வாரியம் தகவல் !!!

மின்சார வாரியம் 

தமிழ்நாட்டில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முக்கிய அறிவிப்பை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்ச 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான ட்ரான்ஸ்பார்மர் அமைக்க தேவையில்லாத பட்சத்தில் மூன்று நாட்களில் மின்சாரம் தர வேண்டும் இல்லை என்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வந்தது மேல்நிலை கேபிள்கள் உள்ள இடங்களில் மின் கட்டணம் குறைவாகவும் நிலத்தடி கேபிள்களுக்கு அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும். மேலும் தற்பொழுது ஏற்பாடுகளுடன் மேம்பாட்டு கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்க படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டு கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாக திருப்பி தர வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வோர் கட்டணமாக கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையம் கடிதத்தில் தெரிவித்தனர்.

இனிமேல் மேல்நிலை கேபிள்கள் (oh) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கான (UG) அதிக மேம்பாட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுபோக சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல் வருகின்றன. தமிழ்நாட்டில் மின் கட்டண முறையில் முக்கியமான சில மாற்றங்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம் என்று மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story