தாளவாடியில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்து தின்ற யானை

தாளவாடியில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்து தின்ற யானை

தாளவாடியில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்து தின்ற யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

தாளவாடியில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்து தின்ற யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

தாளவாடியில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்து தின்ற யானை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகம் வனப்பதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்தப் பகுதிகளில் கரும்பு, வாழை, தென்னை மற்றும் காய்கறிகள் பயிர் செய்து வருகின்றனர். இதனுடன் தோட்டங்களுக்கு இடையே ஊடுபயிராகப் மா மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளனர்.

இவற்றில் இப்போது அதிக அளவு மாம்பழங்கள் விளைந்துள்ளன. நேற்று இரவு தாளவாடி, அருகே உள்ள நெய்த்தாள்புரம் கிராமம், தொட்டத்தாய் அம்மன் கோவில் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. தோட்டத்தில் சுற்றி திரிந்த யானை மாமரத்தை கண்டதும் மரத்தில் முன்னங் காலை வைத்து மாம்பழத்தை தும்பிக்கையால் பறித்தது பின் கீழே விழந்த மாம்பழத்தை சுவைத்துத் தின்றதை இரவு காவலுக்கு சென்ற விவசாயி டார்ச் லைட் வெளிச்சத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

Tags

Next Story