பவானிசாகர் அருகே உள்ள போர்வெல்லை உடைத்த யானைகள்
பவானிசாகர் அடுத்துள்ள சின்ன மாரியம்மன் கோவிலில் நேற்று மூன்று யானைகள் புகுந்து தண்ணி டேங்க் மற்றும் போர்வெல்லை உடைத்து தொம்சம் செய்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன இதில் யானை மான் புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் வரும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது.
இந்நிலையில் நேற்று பவானிசாகர் அணையில் தண்ணீரை தேடி வந்த மூன்று காட்டு யானை பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்து மூன்று யானைகள் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல் தென்னை மரங்களை இழுத்து நாசமாக்கியது அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால்,
இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்