நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை

நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை

கோபி சட்ட மன்ற உறுப்பினருமான கே. ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.


கோபி சட்ட மன்ற உறுப்பினருமான கே. ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூரில் நடைபெற்ற, தனியார் கார்களுக்கான பாகங்கள் தயாரிக்கும் நிறுவன வேலை வாய்ப்பு முகாமில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுகு பணி நியமன ஆணையை வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் பிரபல கார்களுக்கான பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதற்கான விளம்பரங்கள் கடந்த 1 வாரத்துக்கு முன்னரே செய்யப்பட்டு வந்த நிலையில் கார்களுக்கான பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியில் சேர விருப்புள்ள பட்டதாரி மாணவர்கள் கோபி,நம்பியூர், கெட்டி செவியூர், குருமந்தூர்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500 கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள்,இளைஞர்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வில் பங்கேற்றனர். காலை முதலே நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்ட மன்ற உறுப்பினருமான கே. ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார், தொடந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் நடைபெற்ற நேர்முக தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த தனியார் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கோபி சட்ட மன்ற உறுப்பினருமான கே. ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

Tags

Next Story