செந்தில் பாலாஜி வழக்கில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை !
அமலக்கத்துறை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மன்னிப்பு கோரியுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் மன்னிப்பு கேட்கப்பட்டது.
மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை, " செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகும் எம்எல்ஏவாக நீடிக்கிறார் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைக்க கூடும் . அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில், ''எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு வழக்கில் உடனடியாக விசாரிக்க வேண்டும்'' என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.