அருப்புக்கோட்டை வழியாக சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
அருப்புக்கோட்டை வழியாக சென்ற முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் செல்வதற்காக சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக சென்றார். அப்போது அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் நகர ஒன்றிய திமுகவினர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்தும் பரிசுகள் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர் கட்சியினரின் வரவேற்புக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி சென்றார். முதலமைச்சர் வருகை முன்னிட்டு காந்திநகர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story